மீட்கப்பட்ட முருகன் சிலை PT
தமிழ்நாடு

திருத்தணி: ஆற்றுமணலில் புதைந்திருந்த முருகன் சிலை மீட்பு

திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

PT WEB

செய்தியாளர் - நரேஷ்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாகசாலை கிராமம் அருகே உள்ள கொசஸ்தலையாற்றில் கரையோரப் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே மூன்றரை அடி உயர முருகன் கற்சிலை அவர்களுக்கு கிடைத்துள்ளது.

முருகன் சிலை

இதுகுறித்து கிராம மக்களுக்கு தெரியவரவே உடனடியாக விரைந்து வந்து சிலைக்கு மஞ்சள் குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட தொடங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் பொதுமக்களிடமிருந்து சிலையை மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் திருத்தணி பாகசாலை பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.