தமிழ்நாடு

ஜீவசமாதி அடைவதில் முருகன் உறுதி: வழக்கறிஞர் தகவல்

webteam

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைவதில் உறுதியுடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்தித்து திரும்பிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், "ஜீவசமாதி அடைவதில் முருகன் உறுதியாக உள்ளார். முருகனின் உடல் நிலை 13 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது உண்ணாவிரம் இருப்பதால் மேலும் பாதிக்கும் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். நளினிக்கு பரோல் வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டு. முருகனின் விடுதலைக்கான வாய்ப்புகள் இல்லாததுதான் அவர் ஜீவசமாதி அடைவதற்கு காரணம். இதற்காக அனுமதி கேட்டு நேற்று தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளார். நேற்று முதல் இரண்டாவது நாளாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜீவசமாதி அடைவது தனக்கு இறைவன் இட்ட கட்டளை என முருகன் கூறியுள்ளார். 

முருகனிடம் சிறைதுறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், முருகனுக்கு 2003-முதல் கண் பார்வை குறைபாடு, பல்வலி போன்ற உடல் நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக வெளியில் சிகிச்சை பெற கடந்த 13 ஆண்டுகளாக சிறைதுறைக்கு கோரிக்கை வைத்தும் பலனில்லை. தற்போது முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு இருப்பது அவரது உடல்நிலையை மேலும் பாதிக்கும். எனவே அரசு இதற்கு உரிய தீர்வு காணவேண்டும். நளினிக்கு பரோல் வழங்குவதில் அரசுக்கே அதிகாரம் உண்டு. நளினி பரோல் தொடர்பான மனு மீதான விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வருகிறது" என்று தெரிவித்தார்.