தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு திடீர் ரத்து

முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு திடீர் ரத்து

Rasus

முல்லைப் பெரியாறு அணையில் வருகின்ற 16-ம் தேதி நடைபெற இருந்த மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.  அணையின் பாதுகாப்பு, உறுதித் தன்மை மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மூவர் குழுவின் புதிய தலைவரான மத்திய நீர்வள ஆணைய அணை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சிவராஜன் தலைமையில் வரும் 16-ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 15 மாதங்களுக்கு பிறகு மூவர் குழு ஆய்வு நடத்தப்பட இருந்ததால் எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் வருகின்ற 16-ம் தேதி நடைபெற இருந்த மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஆய்வு ஒத்திவைக்கப்படுவதாக துணைக் குழுவிற்கு சிவராஜன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.