தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு‌ அணை நீர் திறப்பு: மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக‌ அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு‌ அணை நீர் திறப்பு: மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக‌ அதிகரிப்பு

webteam

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனம் மற்றும் குடிநீருக்கான நீர் திறப்பு அதிகரிப்பால் அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 42 மெகாவாட்டில் இருந்து 90 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர் தேக்கடியில் இருந்து கால்வாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு குமுளி மலையில் உள்ள "பென் ஸ்டாக்" குழாய்கள் மூலம் கீழிறக்கப்பட்டு, தேனி மாவட்டம் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக பாசனம் மற்றும் குடிநீருக்கான நீர் திறப்பு விநாடிக்கு 467 கன அடியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் இதனால், லோயர்கேம்ப் பெரியார் நீர்மின் உற்பத்தி நிலையத்தில், மூன்று ஜெனெரேட்டர்கள் இயக்கப்பட்டு தினசரி தலா 24, 24, 42 மெகாவாட் மின் உற்பத்தி முறையே நடந்து வருகிறது. மின் உற்பத்திக்கு பின் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர் தேனி மாவட்டம் வைகை அணையை சென்றடைய உள்ளது