தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது

webteam

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை சற்று ஓய்ந்துள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. 

முல்லைப்பெரியாறு  அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 544 கன அடிக்கும் குறைவாகவே நீர்வரத்து காணப்படுகிறது. நீர்மட்டம் 121 புள்ளி 80 அடியாகவும், நீர் இருப்பு 2 ஆயிரத்து 984 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி 126 மெகாவாட்டிலிருந்து 90 மெகாவாட்டாக குறைந்தது. தமிழகத்திற்கான நீர்திறப்பு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் 90 மெகாவாட்டாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு, தலா 42, 24, 24 மெகாவாட் என 90 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.