தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

Rasus

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து சற்றே அதிகரித்து, நீர்மட்டம் 113 அடியை தாண்டியுள்ளதாகப் பொதுப்பணித்துறை ‌அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக கருதப்படும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. அணைப்பகுதியில் அதிகபட்சமாக 57 மில்லி மீட்டரும், தேக்கடியில் 26 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 75 கனஅடியிலிருந்து 455 கனஅடியாக அதிகரித்ததுள்ளது. அணையின் நீர்மட்டமும் 112.90 அடியிலிருந்து 113.10 அடியாக உயர்ந்துள்ளது.