தமிழ்நாடு

“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆந்திர போலீசார் பிடியில் முகிலன் கோஷமிடும் வீடியோ வெளியானது

“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆந்திர போலீசார் பிடியில் முகிலன் கோஷமிடும் வீடியோ வெளியானது

webteam

முகிலனை திருப்பதியில் பார்த்தேன் என அவரது நண்பர் கூறியிருந்த நிலையில், முகிலனை திருப்பதி ரயில்வே போலீசார் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளரை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து அவரது நண்பர் சண்முகம் கூறுகையில், “ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்றேன். அப்போது திருப்பதியில் முகிலனை பார்த்தேன். அவர் கோஷமிட்டு கொண்டே ஆந்திரா போலீசாருடன் சென்று கொண்டிருந்தார். வெள்ளை கலர் சட்டை அணிந்திருந்தார். இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவித்தேன். அவர் ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாம் என கேட்டார். ஆனால் ரயில் புறப்பட்டதால் எடுக்கமுடியவில்லை என தெரிவித்தேன். ஆந்திர போலீசாரின் பிடியில் முகிலன் இருக்கிறார் என திட்டமிட்டமாக தெரிகிறது” எனக்கூறியிருந்தார். 

இந்நிலையில், காணமல் போன முகிலனை திருப்பதி போலீசார் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ அதிகப்படியான தாடியுடன் வெள்ளை நிற சட்டை அணிந்தபடி உள்ளார். போலீசார் அழைத்துச் செல்லும் போது, “அழிக்காதே அழிக்காதே..தமிழ்நாட்டை அழிக்காதே. நியாயமா? நியாயமா? அணுக் கழிவு மையம் அமைப்பது நியாயமா. கூடங்குளத்தில் அணுக் கழிவு மையத்தை அமைக்காதே” என முகிலன் முழக்கமிட்டபடி செல்கிறார்.