தமிழ்நாடு

எட்டயபுரம் இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுசெய்து நிவாரணம் வழங்கிய கனிமொழி எம்.பி

எட்டயபுரம் இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுசெய்து நிவாரணம் வழங்கிய கனிமொழி எம்.பி

kaleelrahman

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாமில் உள்ளவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து நிவாரண பொருள்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் தாப்பாத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து, முகாமில் உள்ள 382 குடும்பங்களுக்கு நிவாரணமாக 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார். பின்னர் முகாமைச் சுற்றி ஆய்வு செய்தார்.

அங்கு, ரூ.12 லட்சம் மதிப்பில் நடைபெறும் ரேஷன் கடை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடனிருந்தார். அப்போது, தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். மருத்துவம், வேளாண் படிப்புகளில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.