தமிழ்நாடு

உடலில் டெஸ்டரை வைத்து எம்.பி கணேசமூர்த்தி ஆய்வு

உடலில் டெஸ்டரை வைத்து எம்.பி கணேசமூர்த்தி ஆய்வு

Rasus

உயர்அழுத்த மின் கோபுரத்தின் கீழ் நின்று தன் உடலில் டெஸ்டரை வைத்து கணேசமூர்த்தி எம்.பி ஆய்வு செய்தார்.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் என பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. உயர்அழுத்த மின் கோபுரத்தின் அருகாமையில் கூட மின் தாக்கம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கோபுரங்களின் கீழே நின்றால் கூட மின்சாரம் தாக்கி விடுமோ என்ற அச்சம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு தொகுதி எம்.பியான கணேசமூர்த்தி நேற்று உயர்அழுத்த மின் கோபுரத்தின் கீழ் நின்று ஆய்வு செய்தார். ஈரோடு விஜயமங்கலம் அருகே உள்ள மூணான்பள்ளி என்ற இடத்தில் உயர்அழுத்த மின் கோபுரம் ஒன்று உள்ளது. இதன்கீழே நின்று கொண்டு, அருகாமை பகுதியில் மின்தாக்கம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நினைத்த கணேசமூர்த்தி எம்.பி உடலில் டெஸ்டரை வைத்து சோதித்து பார்த்தார். அப்போது டெஸ்டரில் இருந்த விளக்கு ஒளிர்ந்தது. பின்னர் அந்த இடத்தில் இருந்து அவர் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “ உயர்அழுத்த மின் கோபுரத்தின் கீழ் நின்று உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால், டெஸ்டரில் விளக்கு ஒளிர்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன். அத்துடன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்க செய்ய உள்ளேன்” என தெரிவித்தார்.