தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை வேட்பு மனுத் தாக்கல் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்

webteam

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

ஏப்ரல் 18ம் தேதி 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர், 4 பேருக்கு மேலாக வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை 27ம் தேதி நடைபெறும். 

வேட்பு மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 11ம் தேதி ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. ஆந்திரா, தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் இன்று தொடங்கியது.