தமிழ்நாடு

வண்ணங்களை வாயால் கொப்பளித்து விதவிதமான படங்களை வரைந்து அசத்தும் ஓவிய ஆசிரியர்

வண்ணங்களை வாயால் கொப்பளித்து விதவிதமான படங்களை வரைந்து அசத்தும் ஓவிய ஆசிரியர்

kaleelrahman

திருக்கோவிலூர் அருகே வண்ணங்களை வாயால் கொப்பளித்து விழிப்புணர்வு படங்களை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், ஓய்வு நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல வகையான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இதற்கு முன்னதாக விவேகானந்தர் உருவத்தை மணல் சிற்பமாக செய்த இவர், தனது நுனி நாக்கில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் படத்தை வரைந்து அசத்தியுள்ளார். மேலும், குளிக்கும் சோப்பில் தலைவர்களின் உருவங்களையும் செதுக்கி அசத்தி வருகிறார்.

நடிகர் விவேக்கின் தீவிர ரசிகரான இவர், விவேக்கின் கொள்கையான மரம் வளர்க்கும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் வாயில் வண்ணங்களை (கேசரி பவுடர் காபித்தூள்) கொப்பளித்து மரத்தின் படத்தை வரைகின்றார். இதன் மூலம் மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்தி வருகிறார்.