தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் திட்டம் கையெழுத்தானது

ஹைட்ரோகார்பன் திட்டம் கையெழுத்தானது

webteam

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் டெல்லியில் கையெழுத்தானது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்ததின் மூலம் நாடு முழுவதும் 31 இடங்களில் 22 நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளன. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டமும் இதில் அடங்கும். முன்னதாக நெடுவாசலில் நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது ஷேல் கேஸ் எடுக்கப்பட மாட்டாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டங்களைத் தொடங்குவதாக இருந்தால் மக்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே, தொடங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் நெடுவாசல் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.