Rain pt desk
தமிழ்நாடு

காலை தலைப்புச் செய்திகள்: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு TO சிஎஸ்கே vs பஞ்சாப் போட்டி!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது மத்திய அரசு உள்ளிட்ட முக்கிய தலைப்பு செய்திகளை பார்க்கலாம்....

webteam

நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு. தமிழ் நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்பு.

சென்னை பட்டாபிராம் மின்பர்மான நிலையத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து. தேக்காடு, பட்டாபிராம், கக்கன்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே தமிழகத்தின் பல இடங்களில் மழை. வேப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி.

நேல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், இறந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு. ஏழு தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர வசாரணை.

ஜெயக்குமார் மரண வாக்குமூலம் என சமூக வலைதளங்களில் பரவும் கடிதம். 30ஆம் தேதியே புகாரளித்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என நெல்லை எஸ்பி மறுப்பு.

Fire

ஜம்மு காஷ்மீரில் விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல். விமானப்படை வீரர் உயிரிழப்பு, நான்கு பேர் படுகாயம்.

விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ராகுல்காந்தி கண்டனம். கோழைத்தனமான தாக்குதல் என எக்ஸ் வலைதளத்தில் பதிவு.

காங்கிரஸ் கட்சி கோழை அரசாங்கம் நடத்தியது என பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு. பாகிஸ்தான் உலகெங்கும் உதவி கேட்டு அழுவதாகவும் விமர்சனம்.

நாளை மறுநாள் முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வாகனங்களில் சுற்றுலா வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். அரசு பேருந்துகளில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தேனியில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது 7 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு. வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு.

திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல். ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியிடம் சிக்கியது.

சேலம் தீவட்டிப்பட்டியில் கலவர சம்பவத்திற்கு காரணமான இளைஞர்கள். பெட்ரோல் குண்டு தயாரித்த சிசிடிவி காட்சிகளை வைத்து முக்கிய குற்றவாளியை பிடிக்க காவல்துறை நடவடிக்கை.

கூடலூர் அருகே சாலையில் நடந்து வந்த காட்டுயானை. நாய் துரத்தியதால் வேகமாக ஓடி வனப்பகுதிக்குள் சென்றது.

விருதுநகர் அருகே மின்மாற்றி பழுது காரணமாக கடந்த 12 தினங்களாக கருகிவரும் பயிர்கள். நான்காயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் பாய்ச்சி வரும் விவசாயிகள்.

Jayakumar

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இன்று வெப்பநிலை இயல்பை விட ஐந்து டிகிரி அதிகமாக இருக்கும். நாளை மறுநாள் முதல் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தகவல்.

பெண் கடத்தல வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுட மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது. பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணும் மீட்பு.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை புதிய தலைமுறைக்கு பேட்ிடி.

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர்சிங் லவ்லி, பாஜகவில் ஐக்கியம். காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், திடீர் முடிவு.

வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி முழுவதுமாக நீக்கம். ஏற்றமதிக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்தது மத்திய அரசு.

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஸ் குப்தா, ராஜினாமா. தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக தகவல்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியில் எண்ணெய் குழாய்கள் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இந்திய தூதர் தகவல்.

லண்டன் மேயராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வானார் சாதிக் கான். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து மேயராக உயர்ந்த பாகிஸ்தான் வம்சாவளி.

பிரேசிலில் தொடர் மழையால் ஏற்பட்ட விபத்துகள். உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு ஹாட்ரிக் வெற்றி குஜராத் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ஏழாமிடம் பிடித்தது.

ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்துமா சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியுடன் மோதல்.