தமிழ்நாடு

தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

webteam

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சில மணி நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சாரல் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு மாதமாக மழையின்றி அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் மீண்டும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. 

நேற்றிரவு மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சில மணி நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு தணிந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றால அருவியிலும் நீர் வரத் தொடங்கி இருக்கிறது. ஒரு மாதத்துக்கு பிறகு சாரல் மழை பெய்து இதமான சீசன் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.