பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கத்திற்கு மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி, .. உணவு டெலிவரி செய்வது போல் இருசக்கரத்தில் வந்த நபர்கள், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டவெளியில் கொடூரமாக படுகொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று பலத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து , குற்றவாளிகளை கைதுசெய்ய போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்தவகையில், இதுவரை இவ்வழக்கு தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 25 நபர்கள் மீது கூண்டாஸ் போடப்பட்டுள்ளது
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் மீதான 5000 க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் காவல்துறையினர் சமர்பித்துள்ளனர்.