தமிழ்நாடு

சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு பணி!

சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு பணி!

webteam

சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இவற்றின் மொத்தம் 43.19 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சென்னையில் மெட்டோ பணிகளுக்கு இடையில் சிங்காரச் சென்னை 2.O மற்றும் TURIF என்ற இரண்டு திட்டங்களில் இந்த சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.குறிப்பாக கோடம்பாக்கம், கே.கே நகர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், சேத்பட்டு, எழூம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. 319 சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மதிப்பு 28.9 கோடியாகும், மற்றொரு திட்டத்தில் 249 சாலைகளில் 22.9 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியானது. நடைபெற்று வருகிறது.

பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட 117 இடங்களில் 9.3 கோடி மதிப்பீட்டில் சாலை போடப்படுகிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 319 இடங்களில் 200 இடங்களில் மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் அனைத்தும் பெரும்பாலான இரவு நேரத்தில் அமைக்கப்படுகிறது. சாலைகள் உரிய தரத்தில் அமைக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.