தமிழ்நாடு

கனமழை: மூழ்கிய 3,500 ஏக்கர் உப்பளம் - 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழப்பு

Sinekadhara

மழைக்காரணமாக மரக்காணத்தில் அமைந்துள்ள 3500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பளம் நீரில் மூழ்கியது. இதனால் சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று இரவு முதல் அதிகாலைவரை பெய்த கனமழை காரணமாக 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் நீரில் மூழ்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை பருவ மாற்றம் காரணமாக மழை பெய்ததால் சில தினங்களுக்குமுன் மழைநீர் வடிந்து உப்பு உற்பத்திக்கான வேலை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று இரவுமுதல் பெய்த மழையால் உப்பளம் பாத்திகள் முற்றிலும் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள வேதனை அடைந்துள்ளனர்.