தமிழ்நாடு

த‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா

த‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா

Veeramani

த‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது. கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி 132 குழந்தைகளுக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் 9 ஆம் தேதி 161ஆகவும் 10 ஆம் தேதி 183ஆகவும் அதிகரித்தது. 11ஆம் தேதி மட்டும் 203 குழந்தைகள் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.

ஏப்ரல் 12ஆம் தேதி இந்த எண்ணிக்கை 250ஆகவும்,13ஆம் தேதி 225ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி 288 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 15ஆம் தேதி இந்த எண்ணிக்கை 256 ஆக குறைந்தது. இதுவே ஏப்ரல் 16ஆம் தேதி 310 ஆகவும் 17ஆம் தேதி 319ஆகவும் உயர்வு கண்டது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என கூறும் மருத்துவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.