தமிழ்நாடு

ஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்

webteam

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5‌ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியை இன்று ஒரேநாளில் பத்தாயிரம் பேர் பார்வையிட்டுளளனர். 

கடந்த ஜூன் 13 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழ்வ‌ராய்ச்சிப் பணிகளால் 2600 ஆண்டுகள்‌ தொன்மையான மனிதர்கள் பயன்படுத்திய இரட்டைச்சுவர், நேர் சுவர், வட்டச்சுவர், நீர் வழிப்பாதை, தங்க அணிமணிகள், உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன. 

பழந்தமிழர் பெருமையை உலகுக்கு உரைக்கும் வகையில் வெளிப்படும் கீழடி கண்டுபிடிப்புகளை நேரில் காண நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இன்று ஒரேந‌ளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.