பேருந்து கட்டண உயர்வு காரணமாக, சென்னையில் 7 நாட்களில் சுமார் 8 லட்சம் பேர் ரயலில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வழக்கத்தைவிட கூடுதலாக 7 லட்சத்து 95 ஆயிரம் பேர் ரயிலில் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்மூலம் கூடுதலாக ஒரு கோடியே 96 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் இந்த காலகட்டத்தை ஒப்பிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.