குரங்கு காய்ச்சல் PT
தமிழ்நாடு

கர்நாடகாவில் பரவும் குரங்கு காய்ச்சல்; பாதிப்புகள் என்ன, வராமல் தடுக்கும் முன்னேற்பாடுகள் என்ன?

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Jayashree A

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

குரங்குகாய்ச்சல் :

குரங்கு காய்ச்சல் என்பது குரங்கு இறந்ததும் அதில் தோன்றும் வைரஸ் தொற்றால் பரவக்கூடிய காய்ச்சல். முதலில் இந்த காய்ச்சல் ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு பரவும், அதன் பிறகு மனிதர்களை தாக்கும்.

நோயின் அறிகுறி:

இந்நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களை தாக்கிய ஒரு வார காலத்திற்குள், காய்ச்சல், உடல் வலி தசை வலி , வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.

அதன் பிறகு இதன் வீரியம் அதிகரித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து உடல்நல குறைவு ஏற்பட காரணமாகிறது.

தடுக்கும் முறை:

இந்நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு உண்டான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நோயானது கர்நாடக எல்லைப்பகுதிகளில் அதிகம் காணப்படுவதால் அப்பகுதிக்கு வேலைக்கு சென்று வரும் மக்கள் போதிய கவனம் கொள்ளவேண்டும்.

முகத்தில் மாஸ்க் அணிந்திருத்தல் நலம்.

வீடுகளில் வளர்க்கும் ஆடுமாடுகளுக்கு நோய் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவேண்டும்.

இத்தகைய முன்னேற்பாடுகளை கையாண்டால் நோய் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்கமுடியும்.