தமிழ்நாடு

எங்கு தங்குகிறார்? எங்கு விருந்தளிக்கிறார்? - பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

எங்கு தங்குகிறார்? எங்கு விருந்தளிக்கிறார்? - பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

webteam

 பிரதமர் மோடியின் மாமல்லபுர  பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வமான  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

அதன்படி பிரதமர் மோடி இன்று காலை 9.45 மணி டெல்லியில் இருந்து புறப்படுகிறார். நண்பகல் 12.30 மணி சென்னை வருகை தரும் பிரதமர், 12.35 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் பயணம் செய்கிறார். சரியாக 12.55 மணிக்கு மாமல்லபுரம் சென்று சேரும் அவர், மதியம் 1.10 மணிக்கு‌ தாஜ் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். மாலை 4.45 மணிக்கு‌ கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் பயணம் செய்யும் பிரதமர், மாலை 5 மணிக்கு சீன அதிபரை வரவேற்கிறார். 

அதனையடுத்து இருவரும் மாலை 5 - 6 மணி வரை புராதன சின்னங்களைப் பார்வையிடுகின்றனர். பின் 6 - 6.30 மணி வரை கலை நிகழ்ச்சிகளைக் கா‌ண‌ உள்‌ளனர். பிறகு 6.45 - இரவு 8 மணி வரை பிரதமர் மோடி - சீன அதிபர் பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பு முடிவடைந்ததும் இரவு 8.05 மணி பிரதமர் மோடி மகாபலிபுரத்திலிருந்து புறப்படுகிறார். இரவு 8.20 மணி கோவளம் தாஜ் நட்சத்திர விடுதியில் பிரதமர் தங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளுடன் பிரதமரின் முதல் நாள் திட்டம் முடிவடைகிறது. 

அதனை அடுத்து மறுநாள் காலை 10 - 10.40 வரை பிரதமர் மோடி - சீன அதிபர் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இந்தப் பேச்சு வார்த்தை பின் காலை 10.50 - 11.40 மணி வரை தாஜ் நட்சத்திர விடுதியில் இருநாட்டு அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

பகல் 11.45 - 12.45 மணி வரை சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். நண்பகல் 1.40 மணி மகாபலிபுரத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார். பிற்பகல் 2.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைய உள்ளார்.