சுப்ரமணியசாமி pt desk
தமிழ்நாடு

”மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது: தோற்கடிக்க வேண்டும்” - பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கருத்து!

திமுகவின் ஆட்சியை 2 முறை கவிழ்த்தவன்; தற்போது திமுகவை கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

பாஜகவை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்ரமணியசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுப்ரமணியசாமி பேசுகையில்...

PM Modi

பாஜக வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவதை பற்றி தெரியாது என்றவரிடம் தமிழகத்தில் திமுக - பாஜக என களம் மாறியுள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்... சிரித்தபடி, கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். ஆனால், அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்னை உள்ளது. என்ன செய்தார் மோடி. ஒன்றும் செய்யவில்லை” என்றார்.

Karunanithi

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ளனரே என்று கேட்டதற்கு, ”அது என் தலைவலி இல்லை. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக் கொண்டு சென்றுவிடுவேன் என மோடி நினைப்பதால் என்னை தூரமாக வைத்துள்ளார். பாஜக கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை.

திமுக கட்சியில் எத்தனை பைத்தியகாரர்கள் உள்ளனர். ராஜீவ்காந்தி என்ற நபர், பிராமணர்களை படுகொலை செய்வோம் என பேசியுள்ளார். என்னிடம் பேசச் சொல்லுங்கள். நான் திமுக ஆட்சியை கவிழ்த்தவன். திமுக கருணாநிதி ஆட்சியை 2 முறை கவிழ்த்தவன் நான். தற்போது கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

Tamilisai

மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. தோற்கடிக்க வேண்டும். இரண்டு முறை மோடி பிரதமர் ஆனபோது எதுவும் பெருசா செய்யவில்லை. சீனா எல்லையில் நிலங்களை ஆக்கிரமிக்கிறது, ஆனால் எதையும் தடுக்கவில்லை. பொருளாதர அளவிலும் ஒன்றுமே நடக்கவில்லை. விளம்பரத்தில் சொல்கிறார்கள், அது செய்துவிட்டோம், இது செய்துவிட்டோம் என்று, நான் பேராசிரியராக இருந்தவன். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. சின்ன நாடான மாலத்தீவு நம்ம ராணுவத்தினரை வெளியே எடுத்துவிட்டார்கள். ஆனால், நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்று தெரிவித்தார்.