தமிழ்நாடு

“தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி” - மோடி தமிழில் ட்வீட் 

“தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி” - மோடி தமிழில் ட்வீட் 

webteam

தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

சீன அதிபர் ஜின்பிங் உடன் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக 2 நாள் பயணமாக மோடி தமிழகம் வந்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். 

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்ற மோடி அங்கிருந்து கார் மூலம் கோவளம் செல்கிறார். இதனிடையே தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஸி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.