தமிழ்நாடு

சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் புதிய டிஜிட்டல் பலகை 

சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் புதிய டிஜிட்டல் பலகை 

webteam

சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்னை வருகைக்காக புதிதாக ஒரு டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.  பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகிய இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் வரை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விமான நிலையத்தின் ஐந்தாம் எண் நுழைவாயிலில் உள்ள பூங்கா மறு ஆக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இரு நாட்டு ஒற்றுமையை போற்றும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்திய, சீன கலைகள் குறித்த ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் வண்ண விளக்குகளும், அதிதிறன் கொண்ட விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலைய சாலைகளில் ஸி ஜின்பிங்கை வரவேற்பதற்காக புதிதாக டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பலகை நெடுங்சாலை துறையினால் வைக்கப்பட்டுள்ளது. அதில் சீன அதிபரை சென்னைக்கு வரவேற்கும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் தொடர்பான விளக்கத்தை பிரதமர் மோடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இரு நாடுகளின் வர்த்தகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.