தமிழ்நாடு

தமிழகத்தில் அறிமுகமான நவீன ரக ரயில் பெட்டிகள்

webteam

கோவை - சென்னைக்கு இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், எல்.ஹெச்.பி எனும் நவீனரக பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

ரயில் பெட்டிகளை நவீன ரக பெட்டிகளாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கோவை - சென்னை இடையேயான சேரன் விரைவு ரயிலில் எல்ஹெச்பி எனும் நவீனரக ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளின் வசதிக்காக பயோ கழிப்பறைகள் மற்றும் ஒரு ரயில் பெட்டியில் இருந்து மற்றொரு ரயில் பெட்டிக்கு செல்ல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 

அதே போல் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் கூடுதல் ஸ்பிரிங்குகள், ரயில்களின் உள்ளே சத்தம் கேட்காத வகையில் இன்சுலேசன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த நவீன ரக ரயில் பெட்டிகள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.ஹெச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.