தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் தமிமுன் அன்சாரி

டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் தமிமுன் அன்சாரி

webteam

நாகை மாவட்டம் நாகூரில் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுகாதாரமற்ற பகுதிகளை உடனடியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களுக்கும், ‌வர்த்தகர்களுக்கும்‌ இலவசமாக குப்பைக்கூடைகள் வழங்கி, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகூரில் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இலவச குப்பை கூடைகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வழங்கினார். நாகூர் குஞ்சாலி மரைக்காயர் தெரு, நாகூர் கடைதெரு, சிவன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக குப்பை கூடைகள் வழங்கப்பட்டன. மேலும், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக தொற்று நோய் ஏற்படுத்தும் விதமாக உள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சுத்தம் செய்ய நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.