தமிழ்நாடு

ஸ்டாலின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு - எம்.எல்.ஏ இன்பதுரை

ஸ்டாலின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு - எம்.எல்.ஏ இன்பதுரை

webteam

தபால் வாக்கு தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு என எம்.எல்.ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார்

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்‌றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி  நடைபெற்றது. இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு பிறகு மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23-ஆம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 

ராதாபுரம் தபால் வாக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சில கருத்துகளை தெரிவித்தார். அது தொடர்பாக பதில் அளித்த எம்.எல்.ஏ இன்பதுரை, தபால் வாக்கு தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்தார். மேலும், 201 தபால் வாக்குகளிலும் ஒரே தலைமை ஆசிரியரே  சான்றொப்பம் (attestation) செய்துள்ளனர். தபால் வாக்கு தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாகும். முகாந்திரம் இருப்பதாலேயே எனது வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது எனவும் தெரிவித்தார்.