கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டை ஒட்டி தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்ட அரசு விழாவை ஆளுங்கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களும், 2 எம்பிகளும் புறக்கணித்தனர்.
கடலூரில் வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி அரசு சார்பாக நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு இன்று அரசு சார்பில் பந்தக்கால் நடும் விழா நடைப்பெற்றது. விழாவில் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கலந்துகொண்டதால் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்தியா பன்னீர் செல்வம், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், கடலூர் நாடளுமன்ற உறுப்பினர் அருன்மொழித்தேவன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி ஆகியோர் விழாவை புறக்கணித்தனர். இது குறித்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்திய பன்னிர்செல்வத்திடம் கேட்டபோது, தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரை அணுகினால் கோரிக்கைகளை செவிமடுப்பதில்லை என்றும், தங்கள் தொகுதிக்கு எந்த திட்டம் கொண்டுவர நினைத்தாலும் அதனை தடுக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் கூறினார். இதனாலேயே அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்தார்.