தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் - மம்தாவுக்கு ஸ்டாலின் அதரவு

தேர்தல் ஆணையம் நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் - மம்தாவுக்கு ஸ்டாலின் அதரவு

Sinekadhara

மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட தடை தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ள நிலையில் மு.க ஸ்டாலின் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கத்தில் நான்காம்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மீது, முஸ்லீம் வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேர்தல் விதிகளை மீறியதாக பாஜக புகார் அளித்திருந்தது.

இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு பரப்புரையில் ஈடுபட ஒருநாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மம்தா மீது பாஜக அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மம்தா பானர்ஜி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘’நமது நாட்டின் ஜனநாயகம்மீதான நம்பிக்கை, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெறுவதன் மூலம் உள்ளது.


அனைத்து கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒரு சார்பின்மை, நடுநிலை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.