தமிழ்நாடு

’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்

’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

கருணாநிதியின் கனவுக் கோட்டையில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் முதன்முறையாக சென்னையில் சிலை கலைஞர் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சிலை திறப்புக்குப் பிறகு கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர் துரைமுருகனின் வரவேற்புரையை அடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, நன்றியின் அடையாளமாக கருணாநிதி சிலை எழுப்பப்பட்டுள்ளது. அதிலும் தந்தை பெரியாருக்கும், அண்ணாவின் சிலைக்கு நடுவில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. 

பேரவைக்காக கட்டப்பட்ட வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையாக இருந்தாலும் கம்பீரமாக கருணாநிதியின் கோட்டையாகவே அது இன்றும் இருக்கிறது. வாழ்வில் ஓர் பொன் நாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள். நட்பிற்குரிய இனிய நண்பராகவே குடியரசு துணை தலைவர் இருந்துவருகிறார். கலைஞர் கைது செய்யப்பட்டபோது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தார் வெங்கையா நாயுடு. அவர் கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் என்று பேசினார்.