தமிழ்நாடு

'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Sinekadhara

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பதிவில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழும் லட்சக்கணக்கானோர் மீது அதிமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியை, திமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

<div class="fb-post" data-href="https://www.facebook.com/MKStalin/posts/1858865087606686" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/MKStalin/posts/1858865087606686" class="fb-xfbml-parse-ignore">
உலகையே உலுக்கிய கொடிய கொரானா நோய்த் தொற்று காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் பேரிடர் மேலாண்மை...Posted by <a href="https://www.facebook.com/MKStalin/">M. K. Stalin on <a href="https://www.facebook.com/MKStalin/posts/1858865087606686">Friday, 22 January 2021