தமிழ்நாடு

60 டன் கலப்பட எண்ணெய் பறிமுதல்

60 டன் கலப்பட எண்ணெய் பறிமுதல்

webteam

கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வந்த  எண்ணெய் கம்பெனியை சீல் வைத்து 60 டன் கலப்பட எண்ணெய்யை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை கிணத்துக்கடவு  அருகே உள்ள முட்டம்பாளையம் பிரிவு அருகே வணக்கம் ஆயில் கம்பெனியை,கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தி வந்துள்ளார். ஆந்திரா மற்றும் துத்துக்குடியிலிருந்து எண்ணெயை வாங்கி, இங்கு கேரா என்ற பெயரில் அச்சிட்ட டின் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் 500,1000 மில்லி லிட்டர்களில் தேங்காய், சன் பிளவர் எண்ணெயை அடைத்து கேரளாவிற்கு மட்டும் விற்பனை செய்து வந்துள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த எண்ணெய் நிறுவனத்தின் மூலம் கலப்பட எண்ணெய் விற்பது தெரியவந்ததை அடுத்து ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது வணக்கம் ஆயில் கம்பெனி என்ற பெயரில் எண்ணெய்களை வாங்கி,அந்த எண்ணெயுடன் கலப்படம் செய்து கேரா என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது தெரிந்துள்ளது. இதனையடுத்து அங்கு இருந்த 70 லட்சம் மதிப்புள்ள 64,766 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்தனர். மேலும் கம்பெனிக்கு சீல் வைத்தனர். கேரா என்ற பெயரில் விற்கப்படும் எண்ணெய்கள் கேரளாவில் அனைத்து மக்களும் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயாக இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.