தமிழ்நாடு

திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டதா? - Mrs Chennai பட்டம் வென்ற அபர்ணா

திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டதா? - Mrs Chennai பட்டம் வென்ற அபர்ணா

webteam

திருமணமாகிவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று பெண்கள் தங்களுக்காகக் ஒதுக்குகிற நேரத்தை நிறுத்திவிட்டு, குடும்பம்தான் முக்கியம் என்று இருந்துவிடுகிறார்கள். அதையும் தாண்டி சில பேர் சாதித்தும் காட்டுகிறார்கள் அப்படி சாதித்து காட்டிய ஒரு இல்லத்தரசி தான் அபர்ணா கோபாலகிருஷ்ணன். அவர்களிடம் ஒரு நேர் காணல்.

”என் சொந்த ஊர் கேரளா. திருமணத்திற்கு பிறடு சென்னை.அப்பா ஆனந்த் பட்டமனா கேரள கோவில் அர்ச்சகர். மேலும் வேளாண்மை அதிகாரி. அம்மா கிரிஜா ஆனந்த் ரிடையர்ட் டீச்சர்.”

அடிப்படையில் நான் ஒரு வழக்கறிஞர். , மற்றும் ஆசிரியை. வானொலியில் சிறிது காலம் RJ வாக பணியாற்றினேன். சின்னவயசிலிருந்தே மாலலிங்கும் செய்து வந்தேன்.இது மட்டுமல்லாமல், பிசினெஸும் நடத்தி வந்தேன். என் கணவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். எனக்கு ஒரு பையன். கடந்த 5 வருடங்களாக கணவர் வேலை காரணமாக சீனாவில் இருந்தோம். நடுவில் கொரோனா காரணமாக நானும் என் குழந்தையும் இந்தியா வந்துவிட்டோம். திருமணமாகிவிட்டாலே, நம்ம இந்தியப்பெண்களிடம் ஒரு சோம்பேரி தனம் வந்துவிடும். அதாவது அவர்கள் கவனம் முழுதும் குடும்பத்தின் மேல் தான் இருக்கும். தன்னை கவனித்துக்கொள்ள மாட்டார்கள்.

திருமணத்திற்கு முந்தின நாள் வரையிலும் ஏதாவது ஒரு க்ரீம் எடுத்து முகத்திலே போட்டபடி இருப்போம். டயர்டு... ஒர்க் அவுட்... இப்படி நமக்குன்னு நேரம் கொடுப்போம். ஆனா, திருமணம் ஆனதும், அத்தனையும் நின்னுடும். இதிலே வீட்டில் மீதமாகும் உணவுகளை வீண் அடிக்க மனது வராமல், குப்பைத்தொட்டி மாதிரி எடுத்துக்கொட்டிப்போம். வீணாகி விடக்கூடாதுங்கறதுல சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். கிட்சனிலேயே பாதி வாழ்கையை கழித்துவிடுவோம்.

இப்படி எல்லத்தவறுகளையும் நானும் செய்தேன்.ஒரு கட்டத்துல குழந்தை வேறப்பிறக்க... எனக்கு என்னை பார்த்துக்கிற நேரம் குறைந்தது. மேலும் குழந்தை பிறந்ததும் போஸ்ட்பார்டம் பிரச்சனை. சரியாக தூக்கம் இல்லை. ஹார்மோன் பிரச்சனையால் என் உடலில் பல மாற்றங்கள். ஒரு முறை கண்ணாடியில் என்னை நானே பார்த்தப்பொழுது ஷாக் ஆகிட்டேன். என்னடா இது.... இப்படி ஆகிட்டோமேன்னு நினைத்து, டயட், யோகா, தியானம் எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். என்னை நான் பார்த்துக்க ஆரம்பித்த அடுத்த நொடி எழுந்து ஓட ஆரம்பித்தேன். எனது பகல் நேரம் அதிகரித்தது.

ஒரு தன்னம்பிக்கை தானாக உண்டாக, குடும்பத்துடனும் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. கேரளாவில் நடந்த மிஸஸ் கேரளா 2021 போட்டியில் ஃபைனலிஸ்ட் ஆனேன். கூடவே நிறையப்போட்டிகள். ஃபேஷன் ஷோக்களில் கலந்துக்க ஆரம்பித்த வேளை என் கணவர் சென்னை வந்திட்டார்.
நானும் குழந்தையும் சென்னை வந்தோம். இங்க வந்ததும் நான் சும்மா இல்லை. நடந்த அத்தனை ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்க ஆரம்பித்தேன். அப்படிதான் சென்னை ஃபேஷன் போட்டிகள் நடத்தின ‘மிஸஸ் சென்னை 2022’ போட்டியில வெற்றியடைந்தேன். ‘மிஸஸ் இந்தியா இண்டர்நேஷனல்2022 ல் முதல் ரன்னர் சாத்தியமானது.

என் உடல் உபாதைகளும், மன அழுத்தம், எல்லா பிரச்சனைகளையும் கடந்து இந்த டைட்டில்களைப் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுக்கு பின்னாடி என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் இருக்கிறது. குறிப்பாக என் கணவரின் சப்போர்ட் அதிகம் இருக்கிறது.

எனக்கு மிஸஸ் சென்னை கிடைத்ததும் ஹால்ல கத்தி கொண்டாடின முதல் ஆள் என் கணவர் தான். பெண்களுக்கு அவங்க குடும்பம் சப்போர்ட் செய்தால் அவர்கள் பல உச்சத்தைத் தொடுவாங்க. இதற்கு நானே சாட்சி. என் பயணங்களை இத்துடன் நிறுத்தாமல் ,தொடர்ந்து ஓடிட்டு தான் இருப்பேன். என் குடும்பமும் என்னை புரிஞ்சுகிட்டு எனக்கு முழு ஒத்துழைப்பும் தறாங்க. “ என்றார் முகத்தில் புன்னகையுடன்.