தமிழ்நாடு

மத்திய படைகளை அனுப்ப தயார் : உள்துறை அமைச்சகம்

மத்திய படைகளை அனுப்ப தயார் : உள்துறை அமைச்சகம்

rajakannan

தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவத் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நேற்று வரை 11 பேர் உயிரிழந்தனர். இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா பேசியுள்ளார். அப்போது, தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதா என்று அவர் கேட்டறிந்தார். மேலும், மத்திய படைகள் தயாராக இருப்பதாகவும், கேட்டால் அனுப்பி வைக்கப்படும் என்றும் ராஜீவ் கௌபா கூறியுள்ளார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.