தமிழ்நாடு

முழு ஊரடங்கை கண்காணிக்க கொரோனா அதிகமுள்ள 20 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்!

முழு ஊரடங்கை கண்காணிக்க கொரோனா அதிகமுள்ள 20 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்!

sharpana

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்காணிக்க கொரோனா அதிகமுள்ள 20 மாவட்டங்களில் அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு நியமனம்.

செங்கல்பட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் அர.சக்கரபாணி, க.ராமசந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் மாவட்டத்திற்கு மு.பெ.சாமிநாதன் நியமனம்.

மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி நியமனம்.

இப்படி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பூர், வேலூர், விழுப்புரம், கடலூர், நாகை,கிருஷ்ணகிரி, தஞ்சை, தேனி, கன்னியாகுமரி என 20 மாவட்டங்களுக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த 20 அமைச்சர்களை நியமித்துள்ளார்கள்.