தமிழ்நாடு

நெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்

நெக்ஸ்ட் தேர்வு: ஸ்டாலின் - விஜயபாஸ்கர் நேரடி விவாதம்

rajakannan

நெக்ஸ்ட் தேர்வுக்கான எதிர்ப்பை தமிழக அரசு பதிவு செய்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், ‘எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை, அதனை விட்டுத்தரக் கூடாது. மத்திய அரசின் தேசிய மருத்துவக் கழக மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்’ என வலியுறுத்தினார். 

பின்னர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘இதுகுறித்து தமிழக அரசின் கருத்தினை மத்திய அரசு கேட்டிருந்தது. அப்போது, எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அதிமுகவும் இந்த மசோதாவை எதிர்க்கிறது’ என பதில் அளித்தார்.