அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகநூல்
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் உரை.. சூப்பர் அறிவிப்புகளை அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில், ”விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் வரலாற்றில் ஒருசிலரின் பெயர்தான் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஓட்டப்பந்தயம் என்றால் உசைன் போல்ட், கிரிக்கெட் என்றால் மகேந்திர சிங் தோனி. இவர்கள் இருவரும் ஒலிம்பிக் மற்றும் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை அடுக்கடுக்காக குவித்தவர்கள். ஒவ்வொரு போட்டியிலும் இவர்களின் சாதனைகளை இவர்களே முறியடித்து கொள்வார்கள்.

அதேபோல, அரசியல் களத்திலும், முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான் பதவியேற்ற பிறகு களம் காணும் பொது தேர்தல்கள் அனைத்திலும், தனது முந்தைய சாதனையை முறியடிக்கின்ற அளவிற்கு தற்போது வெற்றிகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிறப்பாக விளையாடி உழைத்து 40க்கு 40 பதக்கங்களை பெற்று இன்றைக்கு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தான் தலைமை ஏற்று ஏற்ற பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நமது கழகத்தை வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு காரணம் முதலமைச்சரின் மீது நாங்கள் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறோமோ , அதேபோல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அவர் மீது தளராத நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் போற்றிய சமூகநீதி, பேரறிஞர் அண்ணா அவர்களால் சூட்டப்பட்ட தமிழ்நாடு என்னும் பெயர், முத்தமிழ் கலைஞர் அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ். இவை அனைத்தும் என்றென்றும் காப்பாற்றப்படும் என்கிற நம்பிக்கை நமது முதலமைச்சர் அவர்களை பார்க்கின்ற பொழுது வருகிறது. எப்படி திராவிட அரசு இந்தியாவிலேயே நம்பர் ஒன் அரசாக திகழ்கிறதோ அதேபோல் முதலமைச்சர் அவர்களால் நடத்தப்படுகின்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையானது நம்பர் ஒன் இடத்தை நோக்கி தற்போது பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

இங்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களில் சிலவற்றை பற்றி மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். 2021 ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்ததிலிருந்தே தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 2860 வீரர்களுக்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் இதுவரை 102 கோடியே 72 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கு தொகையாக தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சர்களால் வழங்கப்பட்டது . ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 12 வீரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த முறை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 லட்சத்தை உயர்த்தி 7 லட்சமாக வழங்க முதலமைச்சர் தற்போது ஆணையிட்டுள்ளார்கள். இதுவரை 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கி திட்டம் தான் ”தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைகள் திட்டம்” விளையாட்டில் திறமை உள்ளவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் நீதி, உபகரணங்கள் வழங்கப்படும்.

இந்த அறக்கட்டளையில் தனது சொந்த நிலையில் இருந்து முதல் நிதியாக 5 லட்சத்தை வந்த அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர். இது தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் 375 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை 8 கோடி 62 லட்சம் நிதி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 21 தங்கம் உட்பட 262 பத்தகங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் வீரர் வீராங்கனைகள்.” என்று பல திட்டங்களையும் சாதனைகளையும் தெரிவித்தார்.