கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “அடுத்த 12 நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது. கலைநிகழ்ச்சியோடு விழா தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க வரும் விளையாட்டு வீரர்கள், ஏற்பாட்டளர்களுக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து அவரிடம் ‘மாடுபிடி வீரர்களுக்கு ஊக்கத்தொகை’ குறித்த இபிஎஸ்-ன் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்” என தெரிவித்தார்.