தமிழ்நாடு

நீட் விலக்கு சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்: அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை

Sinekadhara

நீட் விலக்கு சட்டமசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் ஆளுநர் குடியரசுத்தின வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். 1967ஆம் ஆண்டு முதல் இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு கடைப்பிடித்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வின் காரணமாக ஏற்படும் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

அது ஒரு தற்காலிகத் தீர்வுதான் என்றும், நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிப்பதே நிரந்தரமான தீர்வாக அமையும் என்றும் அமைசர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு தன்னுடைய இசைவினை விரைவில் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவுகளுக்கு ஆளுநர் துணை நிற்பார் என நம்புவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.