திராவிடம் என்ற சொல் பிரிவினையை ஏற்படுத்துவதாக நேற்று ஆளுநர் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
“எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் அண்ணாவில் தம்பிகள், கலைஞரின் உடன் பிறப்புகள் நாங்கள். ஆளுநர் ரவியின் அன்றாட புலம்பல்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அனைத்து சட்ட விரோத செயல்களையும் ஆளுநர் ரவி செய்து கொண்டிருக்கிறார். அரசுக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து சதி ஆலோசனை செய்யும் மண்டபமாக ஆளுநர் மாளிகையை பயன்படுத்துகிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும் திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பவை இல்லை.
ஆளுநர் எங்களுக்கு பிரசார கருவிதான். இங்கே இருந்து அவரை மாற்றிவிடக் கூடாது. அவர் இங்கே இருந்தால்தான் எங்களது கொள்கைகளை வளர்க்க முடியும். திராவிட இயக்கத்தின் கொள்ளைகள் தமிழக மக்களின் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” எனஅமைச்சர் தங்கள் தென்னரசு தெரிவித்துள்ளார்.