சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 28) செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி அல்லி, மனுவை பார்க்கிறேன் என பொருள்படும் வகையில், 'Let me See' என தெரிவித்துள்ளார்.