Sekar Babu Inspection @PKSekarbabu| Twitter
தமிழ்நாடு

சிங்கார சென்னை திட்டம்: வேளச்சேரி சோழிங்கநல்லூர் பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு!

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

PT WEB

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 2023 - 24ம் நிதியாண்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்தன. அதன்படி பல்வேறு பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன.

Minister Sekar babu meets press

அப்படி நடைபெறும் பணிகளில், சென்னை வேளச்சேரி 100 அடி புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும் ஒன்று. இந்த பணிகள் எந்தளவில் தற்போது உள்ளன என்பது பற்றி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை பெரும்பாக்கத்திலுள்ள சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது செயலாளர் அபூர்வா, சென்னை மாநகராட்சி 13ஆவது மண்டல தலைவர் துரைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.