தமிழ்நாடு

கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.சி.சம்பத்

கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.சி.சம்பத்

webteam

கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 20 மில்லியன் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 

மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் வருங்காலங்களில் நிறுவப்படும் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கப்படும் என்றார். 

வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்தவர்களை ஊக்குவிக்க, சென்னை டைடல் பார்க்கில் 4 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் முனைவோர் துவக்கி மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.