பேறறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள், மற்றும் திமுக பொறுப்பாளர்கள் இன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் இணைந்து மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 9 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் குறித்த நேரத்திற்கு வந்தாலும், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் வரவில்லை எனத் தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடக்கி வைக்க அமைச்சர் திட்டமிட்டிருந்தார்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்த நிலையில், தொண்டர்களுடன் ஊர்வலமாக சாவகாசமாக வந்து சேர்ந்தார் செல்லப்பாண்டியன். இதனால் கடுப்பான அமைச்சர் ரகுபதி, “இதுபோல் தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டாம்” என்று செல்லப்பாண்டியனின் காலில் விழுந்து கை எடுத்து கும்பிட்டார்.
பின்னர் ஒருவழியாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டாலும், அமைச்சரின் செயல் திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படித்தியது.