minister ragupathy eps pt desk
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “உண்மை குற்றவாளி யாரென்று தெரிந்தால் இபிஎஸ் கூறட்டும்” - அமைச்சர் ரகுபதி

webteam

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து பேசிய அவர்... “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம். எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள்

யார் யார் சதி செயலில் ஈடுபட்டுள்ளனரோ, புலனாய்வின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசமிக்கு உண்மையான குற்றவாளி யாரென தெரிந்தால் சொல்லட்டும்”

செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து...

“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல் முறையீடு செய்து வருகிறார். வேண்டும் என்று காலதாமதம் என சொல்ல முடியாது. ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தை பொருத்தது, நீதிமன்றத்ததின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியாது” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.