தமிழ்நாடு

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்.. லண்டனில் விஜய பாஸ்கர் ஆலோசனை

Rasus

சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்குவது தொடர்பாக லண்டனில் உள்ள பேருந்து பணிமனைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்ற மாசுபடுவதை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மின்சாரம், மின்கலன் பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசின் போக்குவரத்து துறை, லண்டனில் இயங்கி வரும் சி-40 முகமை இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அதன் அடிப்படையில் சி-40 முகமையின் பிரதிநிதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தனர். சென்னையில் தங்கியிருந்த அவர்கள் போக்குவரத்து, நிதி, எரிசக்தி துறையின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். போக்குவரத்து கழகங்களின் தற்போதைய செயல்பாடுகளையும் அறிந்து கொண்ட அவர்கள், லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க வருமாறு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் செயலருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த அழைப்பு ஏற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் செயலர் லண்டனர் சென்றனர். அங்கு மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளை பார்வையிட்டதோடு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனையும் நடத்தினர். இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.