செல்லூர் ராஜூ - அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் கே.என்.நேரு புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை: “செல்லூர் ராஜூ சொல்றபடி செய்லாம்...” - அமைச்சர் K.N.நேருவிடம் கூறிய அமைச்சர் மூர்த்தி!

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்த அமைச்சர் கே.என். நேருவிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய வழிமுறைகளை விளக்கினார்.

PT WEB

மதுரையில் கனமழை கொட்டிய நிலையில், வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது, எதிர்த்திசையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வந்தார். இருவரும், மாநாடு பட பாணியில், ஒருவரை ஒருவர் தலைவர் என அழைத்து பேசிக்கொண்டனர்.

செல்லூர் ராஜூ - அமைச்சர் மூர்த்தி

அப்போது, வைகை அணைக்கு செல்லும் மற்றொரு வழியை அடைத்துவிட்டார்கள் என தெரிவித்த செல்லூர் ராஜூ, அதை கண்டுபிடித்து சரி செய்யுங்கள் என கலகலப்பாக பேசினார்.

இந்நிலையில் அமைச்சர் கே.என்நேரு மதுரையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது செல்லூர் ராஜூ கூறியதை செய்தால், செல்லூர் கண்மாயில் அதிகமாக அடைப்பு ஏற்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். அரசியல்ரீதியாக எதிரும்புதிருமாக இருந்தாலும் முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு மதிப்பளித்து, பிரச்னைக்கு தீர்வுகாண இந்நாள் அமைச்சர் முயன்றது மதுரை மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனிடையே, மழை வெள்ளத்தை வடியவைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தபோது அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மேயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.