ஆவின், மனோ தங்கராஜ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“கள்ளச்சந்தையில் பால் விற்றால் கடும் நடவடிக்கை” - அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பால் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், கள்ளச் சந்தையில் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

webteam

சென்னையில் மழை வெள்ளத்தால் ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனை நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் தடைபட்டது. நேற்றும் அதேநிலை நீடித்தது. பால் வாகனங்கள் வெள்ளத்தில் வர முடியாததால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று பால் விநியோகம் சீரடைந்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தன் X தள பக்கத்தில், “தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொது மக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்கவோ அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில ஆவின் பால் நிலையங்களில், அமைச்சர் நேரடியாக சென்று கள ஆய்வும் செய்துள்ளார்.