mano thangaraj pt desk
தமிழ்நாடு

“ஆவின் நெய் விலை உயர்வு குறித்து பேச அண்ணாமலைக்கு உரிமை இல்லை” – அமைச்சர் மனோ தங்கராஜ்

webteam

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் இன்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

அமைச்சர் மனோ தங்கராஜ்

“தனியார் நெய்யைவிட ஆவின் நெய் விலை குறைவாக விற்கப்படுகிறது. தனியார் நெய் 960 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், விலை உயர்த்திய பிறகு ஆவின் நெய் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்ணாமலை தன்னை விவசாயியின் மகன் என்று கூறுகிறார். அப்படியானால் விவசாய பெருங்குடி மக்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டாமா? தனியார் நெய் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அண்ணாமலைக்கு தெரியாதா? ஆவின் நெய் விலை உயர்வு குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என கூறினார்.